''அர்த்த ஜாமத்தில்!" அர்த்தமற்று நான் கண்ட கனவு!!!
✍ ஆள் நடமாட்டமில்லா நடு இரவு தான்
அது.
எங்கோ என் பணி முடித்துவிட்டு
சற்று பயண களைப்பில்
நேரம் மறந்து .
மணி கணக்கில் கைப்பேசியில் கலந்து
விட்டேன்..!
✍ பின் தான் தெரிந்தது..
நேரம் கடந்து.
கால்கள் இல்லா காட்டேரிகள் நடக்கும்
நேரமென்று .
✍ என்ன செய்ய நான் ..
புத்தி பேதளிக்க.
மனம் குளறுபடியாக.
கால்கள் தள்ளாட
கைகள் பதற..
கண்கள் இருட்டி கொண்டது போல்
ஓர் உணர்வு.
✍ இருந்தும் மனம் திடம் கொண்டு
என் பயணத்தை.
என் bike க்குடன் தொடர்ந்தேன்.
நான் ஒருவளாய்.
✍ எப்போதும் விட சற்று வேகத்தை கூட்டி
ஓட்டினேன்.
இருந்தும் யாரோ ஒருவரின்...
குரல்...
என் bike சத்ததையும்மீறி
காதுக்குள் வீறிட்டு பாய்ந்தது.
✍ பயம் தான்....
ஆனால் என் பயம் எனையே சற்று
யோசிக்க விடாமல் கொன்று விடுமே....!?
✍ எதையும் யோசிக்காது ...
இன்னும் வேகம் எடுத்தேன்.
✍ எதிரே.....! ஓர் பெரிய உருவம்
மண்ணுக்கு மேல்.
வானம் முட்டும் உயரம்.
✍ கால்கள் நீண்டு.
கைகள் தரை தொட.
பற்கள் பளிச்சிட.
தலைக்கும்,காலுக்கும் நீண்டதாய்
கோரம் கொண்ட முடிகள்..
✍ எனை நிறுத்த......!
எனை சற்று மூச்சை நிறுத்தும் சக்தி
அதனிடம் இருந்தது.
✍ அதையும் மீறி ....
இன்னும் வேகத்துடன்
அதன் வயிற்றை கிழித்து கொண்டு..
✍ குடலும் ,குருதியும் பிய்த்து கொண்டு.
என் உடல் முழுதும்
இதே தோரணையில் .
அதனை கடக்க.
✍ அதுவும் விடாது எனை துரத்த ...
துரத்திய அதுவும்.
எனை விட்ட பாடில்லை.
துரத்த,துரத்த.
தூரம் ஓடும்,என் ஓட்டமும் நின்ற பாடில்லை..
✍ பின் மூச்சு பிடிக்க .
ஓட்டி வந்த என் bike நிறுத்தி விட்டு.
தைரியமாக.
பின் திரும்பி பார்த்தேன்..
✍ அப்போது தான் புரிந்தது ...
"அர்த்த ஜாமத்தில்!"
அர்த்தமற்று நான் கண்ட கனவு என்று...!!!

Post a Comment