காதல் கவிதைகள் | தமிழ் கவிதைகள் |

 



தமிழ் கவிதைகள்



🔵உன்னை பிரிந்த அந்த 

ஒரு கணத்தில்

 நான் இறந்துவிட்டேன்...

இப்பொழுதும்

 நடை பிணமாகத்தான் 

வாழ்ந்து கொண்டு 

இருக்கிறேன்  உன் நினைவில் ....!!!



🔵நீ கேட்டதும்

கொடுத்து விடலாம் என்றே,

இன்னும்,

என்னிடமே வைத்திருக்கிறேன் …

என் மனதை ....!!!



🔵நானும் என் 

இதயத்தை இரும்பாக 

தான் வைத்திருந்தேன்!

யாருக்கு தெரியும்!!

அவள் காந்தமாக 

இருப்பாள் என்று!!!



🔵பார்வையில் உணர்த்தியும், 

பக்கம் பக்கமாய் எழுதியும் 

தீராத பல காதல்... 

பெற்றவர்கள் கண்ணீரில், 

உற்றவனை/வளை 

மறந்து கேட்பாரற்று கரைகிறது... !!!



🔵என் உயிரே... என் அருகில் வா,  

நாம் தொலை தூரம் செல்வோம்.



🔵என் அன்பே!!! 

"புல்லாங்குழலாகும்     

        வரை காத்திருக்கும் 

     மூங்கில் போல், உன் 

காதலனாகும் வரை 

     காத்திருப்பேன் 

உனக்காக!!!!



🔵எனக்கு தெரிந்த  

இரண்டு ஸ்வரங்கள்  

என் இனியவளின்  

கை வளயோசையும்  

கால் கொலுசு ச்சத்தமும்!!!



🔵உன் ஆள்காட்டி விரல்,  

அழகு காட்டி 

விரலாகி விடுகிறது...  

என்னை நீ காட்டும் பொது!!!



🔵மாற்றம் பெண்களுக்காக உருவானது...!!!

ஏமாற்றம் ஆண்களுக்காக

 உருவானது...!!!



🔵காதலித்த அனைவரும் கை பிடிப்பதில்லை ;

கை பிடித்த அனைவரும் காதலிப்பதில்லை!!!



🔵பூச்சூடிவிடு என்று சொல்லி

பின்புறமாகத்

திரும்பி நிற்கிறாயே!!!



🔵நான் பூச்சூடும்போது

உன் முகம் மலர்வதை

நான் எப்படிப் பார்ப்பது!!!



🔵உன்னைப் பார்த்து சிலிர்த்த சந்திரனும், 

சிறிது சிறிதாக  மறைகிறான்... 

 தேய்பிறை!!!



🔵என்னை விட சிறந்தது 

உனக்கு கிடைத்து விட்டால்,  

அதைவிட மகிழ்ச்சி  

எனக்கு வேறெதுவும்  

இருக்க முடியாது!!!



🔵தோழமைக்கும், காதலுக்கும் 

நூல் அளவே இடைவெளி… 

அது அறுந்தால் 

மனவலி!!!



🔵கண்ணை இமைக்கும் 

நேரத்தை விட , 

உன்னை நினைக்கும் 

நேரம் தான் அதிகம்!!!



🔵நான் என் காதலை  

      அவளிடம் சொல்ல  

         மறந்தேன் . 

காரணம்  அவளை  

     பார்த்த அந்த  

           நொடி நான்  

   என்னையே மறந்துவிட்டேன்!!!



🔵யாரிடமும் சொல்லாத 

உண்மையை உன்னிடம்

 சொன்னேன், நீயோ அதை பொய்யாக்கிவிட்டாய்!!!!



🔵உன்னைத் 

தேடித்தேடி 

கண்டுபிடித்தேன் 

என்னைத் தொலைப்பதற்கு!!!



🔵எத்தனயோ மொழி 

பேச தெரிந்த எனக்கு, 

உன்னிடம் பேச நினைத்து 

அருகில் வரும் போது 

வரும் மொழி, இது 

மட்டும்தான் அன்பே ... 

மௌனம்!!!



🔵காதலியோடு வாழ்வதற்கு 

தான்  கடவுளிடம் 

கேட்க வேண்டும் ! 

காதலுடன் வாழ்வதற்கு ? 

யாருடைய அனுமதியும் 

தேவை இல்லை ! 

என் உலகில்,  

நானும் என் காதல் மட்டுமே!!!


நன்றி

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post