வாழ்க்கை தத்துவ கவிதைகள் | தமிழ் கவிதைகள்

  


தமிழ் கவிதைகள்:



​♥️சிறப்பான

விடைகளை விட

சிந்திக்க வைக்கும்

வினாக்களே 

அறிவை வளர்க்கும்!!!


♥️என் ஒவ்வொரு

நொடியிலும்

மறைந்திருக்கும்

சுவாரஸ்யம்

நீ அன்பே!!!


♥️நடக்குறது எல்லாமே

நல்லதுக்கு தான்

நடிக்கிற எதையுமே

கண்டுக்காத வரைக்கும்!!!


♥️அப்படியென்ன மாயமோ

புரியவில்லை

நிஜம்கடந்த

நினைவுலகில் மட்டுமே

வாழ்கிறது

நம் சந்தோச

தருணங்கள் அனைத்தும்!!!


♥️உண்மையாக இரு

உனக்கு உண்மையாக

இருப்பவர்களுக்கு மட்டும்!!!


♥️காற்றாய்

தீண்டி காணாமல்

போகின்றாய்

மனதில் ஆசையெனும்

புயலை தூண்டி!!!


♥️நம்மை நாமே

தேடுவது

வாழ்க்கை அல்ல

நம்மை நாமே

உருவாக்கிக் கொள்வது

தான் வாழ்க்கை!!!


♥️எப்பொழுது வருவாய்

என்ற கேள்வியிலேயே

தொங்கி நிற்கிறது

சீக்கிரம் வந்துவிடு

என்ற எதிர்பார்ப்பு!!!


♥️வருத்தம் இங்கே

இரண்டே விதம் தான

நினைத்தது நடக்கவில்லை

என்று சிலர்

நடந்ததை நினைத்து

வருந்திக் கொண்டு சிலர்!!!


♥️உண்ணாத நாட்களுமுண்டு

உறங்காத நாழிகையும்

உண்டு

உனை எண்ணாத

நாட்களென்று

எதுவுமில்லை என்னுயிரே!!!


♥️தேய்ந்து வளரும்

நிலவாய்

நம் காதல்

ஊடலுக்கு

பின் பௌர்ணமியாக!!!


♥️எத்தனை வருடங்கள்

கடந்து திரும்பிப் பார்த்தாலும்

நானா இது என்று மட்டுமே

அதிசயப்பட வைப்பதே

வாழ்க்கையின் சிறப்பு!!!


♥️நீ சென்று

கொண்டே இருக்கிறாய்

உன் நினைவு

வந்து கொண்டே இருக்கு!!!


♥️பேருந்தில்

இருக்கைகாக

ஓடுவது போல

வாழ்க்கை எனும்

பயணத்தில்

காதல் என்ற

இருக்கைக்காக

பலர் ஓடுகின்றனர்!!!


♥️நாணாலின்

தீண்டலிலும்

உன் ஞாபகங்கள்

பேரிம்சையாய்

தீண்டுதே மனதை!!!


♥️கடைசி வரை

உடனிருப்பேன்

என்பதெல்லாம்

போலி வார்த்தைகள் தான்

இங்கு கருவறை முதல்

கல்லறை வரை யாவும்

தனியே என்பதே நிதர்சனம்!!!


♥️எதையும் கண்டு

கொள்ளாத மனம் தான்

உனை கண்டு விட்டால்

எனை கண்களிலேனும்!!!

கடத்திவிட மாட்டாயா

என்றே எண்ணுகிறது


♥️எவ்வளவு 

நிறைவு இருந்தாலும்

ஏதோ ஒரு குறை

இருக்கத்தான் செய்கிறது

எல்லோரது வாழ்க்கையிலும்!!!


♥️தேடியது கிடைக்கும்

போது தான்

தேடல் கூட இன்னும்

அழகாகிறது!!!


♥️ஒருவரின் சின்ன சின்ன

மாற்றங்கள் மனக்கசப்பை

தந்தாலும் அவர்களை

புரிந்து கொள்ள

ஒரு வாய்பினை தந்துவிடுகிறது!!!


நன்றி

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post