தமிழ் கவிதைகள்
🔘"ஏட்டில் பலவரி கவிதை
கிறுக்கினாலும்
எப்போதும்
பிடிக்கும் நெற்றியேட்டில்
என்னவன் கிறுக்கும்
இருவரி கவிதை!!!
🔘"நாம் காத்திருப்பது
தெரிந்தும்
அடுத்தவர்களுக்கு
முக்கியத்துவம்
கொடுப்பதெல்லாம்
அவர்களுக்கே
உள்ள அலட்சிய குணம்!!!
🔘"உன் விழியில்
கற்று கொண்டதை
என் விழியால்
கடத்துகிறேன்
மீட்டு கொள்
விழிகளால் மீண்டும்
நான் கற்று கொள்ள
உன் விழி கவிதைகளை!!!
🔘"நேரம் செல்ல செல்ல
நாட்கள் நகர நகர
வருடம் கடக்க கடக்க
வருந்தும் நினைவுகள்
யாவும் மறைந்து போகும்
மகிழ்வித்த தருணங்கள்
யாவும் ஏங்கும் சுவடுகளாகும்!!!
🔘"நீரில் மாட்டி
கொண்ட இலையாய்
சிக்கி தவிக்கிறேன்
உன் காதலெனும் நதியில்
தத்தளித்த போதும் சுகமாய்!!!
🔘"விடை தெரிந்த
கேள்விகளுடன்
துணிவதல்ல வாழ்க்கை
விடை தெரியாத
கேள்விகளுக்கும்
விடை சொல்ல
துணிவதே வாழ்க்கை!!!
🔘"தீண்டி சென்றாய்
மென்னிதழால்
கன்னத்தை
தீரவில்லை போதை
இன்னும் எண்ணத்தில்!!!
🔘"நம்ம வாழ்க்கைல
நமக்காக சின்ன சின்ன
சந்தோஷம் கொடுக்கிற உறவை
சில அற்ப விடயத்திற்காக
விட்டு கொடுக்காமல்
இருப்பது நம் வரம்
புரிதல் கொண்ட நட்பில்
பிரிவுக்கு இடமே இல்லை!!!
🔘"நீ காவலா காதலா
அறியாத போதும்
அழகாய் தொடர்கிறது
பயணம்
முடிவில்லா
மன பாதையில்!!!
🔘"புரியாதவர்களுக்கு
புரிய வைக்க
நினைப்பதை விட
புரியாத விஷயம்
புரியாதவர்களுக்கு
புரியாமல் இருப்பதே மேல்!!!
🔘"கடல் போல
பெரிய சந்தோஷங்கள்
தேவையில்லை
கால் நனைக்கும்
அலை போல
சின்ன சின்ன
சந்தோஷங்கள் போதும்!!!
🔘"பிறரை காயப்படுத்தாத
புன்னகையும்
தன் காயத்தை மறைக்கும்
புன்னகையும்
என்றுமே பேரழகு!!!
🔘"இந்த வாழ்க்கை
அழகாய் மாறுகிறது
நாம் யாரிடமாவது
அன்பு காட்டும் பொழுதும்
நம்மிடம் யாராவது
அன்பு காட்டும் பொழுதும்!!!
🔘"வாழ்க்கையில்
நமக்கான
அடையாளத்தை
நாம் உருவாக்கியதாக
இருக்க வேண்டும்
பிறர் கொடுத்ததாக
இருக்க கூடாது!!!
🔘"வாழ்க்கை
முடியும் வரையிலும்
ஒரு புதிராகவே இருக்கிறது
புதிரைக் களைவதே
வாழ்வின் சுவாரஸ்யமாகி விட்டது!!!
நன்றி

Post a Comment