தமிழ் கவிதைகள்
1.நம் உலகத்தில்
உன்னென்
நிழலை தவிர
வேறதெற்கும்
இடமில்லை!!!
2.கவலைகள் வந்து கொண்டு
தான் இருக்கும்
அதனை நிரந்தரமாக்குவதும்
தற்காலிகமாக்குவதும்
நம்மிடம் தான் உள்ளது
நிரந்தரமாக்கினால்
நீ நோயாளி
தற்காலிகமாக்கினால்
நீ புத்திசாலி!!!
3.தேநீரில்
கரைந்த சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்!!
4.எப்படியெல்லாமோ
வாழ வேண்டும்
என ஆசைப்பட்டு
ஒரு கட்டத்தில்
எப்படியாவது
வாழ்ந்தால் போதும்
என்ற மனநிலையில்
தள்ளிவிடுகிறது வாழ்க்கை!!!
5.திணறடிக்கும்
உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின்
கடைசி நொடிவரை
ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்!!!
6.மனதிற்கு
பிடித்தமானவர்கள் செய்யும்
அனைத்துமே
அழகானவை தான்!!!
7.வாழ்வில்
நதிபோல் ஓடிக்கொண்டே
இருங்கள்
அன்பினால்
குளம்போல் தேங்கி
வற்றிவிடாதீர்கள்!!!
8.நீள்கின்ற
நிமிடங்களும்
நொடிகளாய்
கரைந்திடுதே
உன்னில்
மூழ்கிவிட்டால்!!!
9.பார்ப்பவன்
என்ன நினைப்பான்
என்று பயத்துடன் வாழாதீர்கள்
படைத்தவன்
என்ன நினைப்பான்
என்று பயந்து வாழுங்கள்!!!
10.நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்
சொல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்!!!
11.உன்
வருகை
தாலாட்டுது
மனதை
மாலைநேர
தென்றலாய்!!!
12.வெற்றி
கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்!!!
13.சிலரின் விருப்பங்கள்
வெளிப்படையானவை
எளிதாக அனைவருக்கும்
தெரிந்துவிடும்
சிலரின் விருப்பங்கள்
மறைமுகமானவை
அவ்வளவு எளிதில்
யாருக்கும் தெரியாது!!!
14.சலிக்காமல்
காத்திருக்கும்
நிலவாக உனை
காண நான்!!!
15.இறந்திட
தைரியம் உண்டு
உன்னை இழந்திட
இல்லை!!!

Post a Comment